உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேதபுரீஸ்வரர் தேரோட்டம்; கவர்னர் துவக்கி வைப்பு

வேதபுரீஸ்வரர் தேரோட்டம்; கவர்னர் துவக்கி வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள, வேதபுரீஸ்வரர் கோவில், 38,ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. கவர்னர் ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ