உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாகன பதிவு சான்றிதழ் அடமானம்; போக்குவரத்து துறை எச்சரிக்கை

வாகன பதிவு சான்றிதழ் அடமானம்; போக்குவரத்து துறை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. விதி 60 மற்றும் 61 மத்திய மோட்டார் வாகன விதி, 1989,ல் குறிப்பிட்டுள்ள படி மட்டுமே, வாகன உரிமையாளர் கடன் பெறவும், நிதியளிப்பவர் கடன் வழங்கவும், கடன் முடிவுற்ற பிறகு, அதனை போக்குவரத்து துறையின் மூலமாக ரத்து செய்யப்படுகிறது. விதிகளை மீறி, வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு அடமானம் வைத்து, பணம் பெறுபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சட்ட விரோதமாக வாகன பதிவு சான்றிதழின், மேல் பணம் அளிப்பவரிடம் இருந்து பணம் பெற்று, தண்டனைக்குள்ளாக வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை