மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சை பெறுவோருக்கு, தனியார் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகள் வாங்கித் தர பணம் இல்லை என, பெண்கள் கண்ணீர் மல்க கூறும் வீடியோ வைரலாகிறது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட பெரியசாமி, மகேஷ், கண்ணன், சிவராமன், ராமநாதன், பாலு, திருமாவளவன், மோகன், மாயக்கண்ணன், ஏசுதாஸ் உள்ளிட்ட 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 10 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். 7 பேர் சாதாரண வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதித்தவர்களுக்கு ஜிப்மரில் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் சிகிச்சைக்கு தேவையான அத்தனை மருந்துகளும் ஜிப்மரில் இல்லை. அதனால் கள்ளச்சாராய சிகிச்சைக்கு அவசியமான சில மருந்துகளை வெளி மருந்தகங்களில் வாங்கி வர பரிந்துரை செய்கின்றனர். இந்த மருந்துகள் வாங்கித் தர தங்களிடம் போதிய பணம் இல்லை என அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், சிகிச்சைக்கு ஒவ்வொரு வேளைக்கும் 600 முதல் 1,200 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள் வாங்கி வர டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். தினசரி பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அந்த அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை என, மருந்து சீட்டுகளை காண்பித்து அழுகின்றனர். தினமும் கட்டட வேலைக்கு சென்று, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் எங்களிடம் வெளியில் மருந்து வாங்கி வர கூறுவது சிரமமாக உள்ளது. காப்பீடு அட்டை இல்லாததால் வெளியில் இருந்து மருந்து மாத்திரைகள் வாங்கி வருமாறு கூறுவதாக தெரிவிக்கின்றனர்.இறந்த பின்பு நிவாரணமாக ரூ. 10 லட்சம் அளிக்கும் தமிழக அரசு, சிகிச்சையில் உள்ளோருக்கு தேவையான மருந்து மாத்திரைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago