| ADDED : ஏப் 06, 2024 05:27 AM
புதுச்சேரி: நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மூத்த குடிமக்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, பான்கேர் நிறுவனம் செயலர் ஸ்ரீதரன், ஹெல்ப் ஏஜ் இந்தியா புதுச்சேரி இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.120க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு, 'உங்கள் வாக்கு உங்கள் உரிமை', 'உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்' போன்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழிப்புணர்வு பேரணி புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அலுவலகத்தில் துவங்கி கடற்கரை சாலையில் முடிந்தது. ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் பான்கேர், ஹெல்ப் ஏஜ் நிறுவனம் செய்திருந்தது.