உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம்

இயந்திரம் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு தாமதம்

திருக்கனுார், : பி.எஸ்.பாளையம், திருக்கனுார், மண்ணாடிப்பட்டு கிராம ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக அரை மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதம் ஆனது.மண்ணாடிப்பட்டு தொகுதி பி.எஸ்.பாளையம் 18வது ஓட்டுப் பதிவு மையம் மகளிர் மட்டும் செயல்பாடு ஓட்டுச்சாவடி மையமாக அமைக்கப்பட்டிருந்தது.இதையொட்டி, ஓட்டுச்சாவடி மையம் வாழைமரம், தென்னை ஓலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மகளிர்கள் மூலம் வரவேற்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனால், ஓட்டுச்சாவடி மையத்திற்கு காலை 7:00 மணிக்கு, ஒட்டுப்பதிவு செய்ய அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் 20க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.ஆனால், அங்கிருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக 30 நிமிடம் தாமதமாக 7:30 மணிக்கு மேல் தான் ஓட்டுப் பதிவு துவங்கியது. இதேபோல், ஒட்டுப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக திருக்கனுார் 10வது ஓட்டுப்பதிவு மையம் காலை 7:40 மணிக்கு துவங்கியது. மண்ணாடிப்பட்டு 12வது ஓட்டுப்பதிவு மையத்தில் பேட்டரி பழுது காரணமாக மதியம் 12:20 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, 12:50 மணிக்கு மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கப்பட்டது. இதனால், அந்த ஓட்டுச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை