உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பேனர்

ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பேனர்

காரைக்கால்: காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், வாங்கவும் கூடாது என, மீனவ பஞ்சாயத்தார் எச்சரிக்கை பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு நிலவியது. காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு, காசாகுடிமேடு, பட்டினச்சேரி உட்பட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கிளிஞ்சல்மேடு செட்டியார் கிராமம் பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில், பல்வேறு இடங்களில் லோக்சபா தேர்தளுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. அப்படி கொடுப்பதும், வாங்குவதும் தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, பல இடங்களில் எச்சரிக்கை பேனர்கள் வைத்துள்ளனர். இதுக்குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், 'அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கிக்கொள்ளலாம் என, மீனவ மக்கள் மீது தவறான கண்ணோட்டத்தில் உள்ளன. மேலும் மீனவர்கள் பிரச்னைகள் குறித்து கோட்டால், சில அரசியல் கட்சியினர் பணத்தை வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப்போட்டீர்கள் என, கேட்டகின்றனர். இதனால் மீனவ மக்களுக்கு கிடைக்கவேண்டிய பல திட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் ஒட்டுக்கு பணம் கொடுக்கடும், வாங்கவும் கூடாது என, பேனர் வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்