உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் மனைவி கைது; கணவருக்கு வலை

ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் மனைவி கைது; கணவருக்கு வலை

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற்று தருவதாக கூறி, 15 லட்சம் ரூபாய் ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர்கள் சத்யா மற்றும் அவரது கணவர் செந்தில்குமார். இருவரும் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்தனர். இவர்களிடம் முதலியார்பேட்டை, திரு.வி.க. நகர், மருத்துவமனை வீதியைச் சேர்ந்த கருநேத்திரன் மனைவி ரஞ்சினி, மகளிர் சுய உதவி குழுவில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார்.அதே போல், மேலும் இரு பெண்கள் சுய உதவி குழுவில் கடன் கேட்டனர். மூவரிடமும் முன் பணமாக 1.45 லட்சம் ரூபாய், 22 சவரன் நகை, பைக், ஸ்கூட்டர், ஐ போன் பெற்றுக் கொண்ட சத்யா கடன் தொகை பெற்று தரவில்லை.இதனால், கொடுத்த நகை, பணத்தை திருப்பி கேட்டபோது, தராமல் சத்யா மற்றும் அவரது கணவர் செந்தில்குமார் மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து ரஞ்சினி முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சத்யா, செந்தில்குமார் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து, சத்யாவை கைது செய்தனர். செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !