உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் மோதி கணவர் கண்முன் மனைவி, குழந்தை உயிரிழப்பு

பஸ் மோதி கணவர் கண்முன் மனைவி, குழந்தை உயிரிழப்பு

உத்தண்டி:புதுச்சேரி, கோட்டைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முக்தாஸ் அகமது, 35. கானத்துார், கலைஞர் தெருவில் வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மனைவி பெனாசிற்பி, 30, மகள் அயதல், 3, மற்றும் நான்கு மாத குழந்தை அசியான் அகமது ஆகியோருடன், நீலாங்கரையில் இருந்து கானத்துார் நோக்கி சென்றார்.உத்தண்டி சிக்னல் அருகே சாலை தடுப்பை ஒட்டி செல்லும்போது, பின்னால் சினிமா கேரவன் வாகனம் 'ஹாரன்' அடித்தபடி வந்துள்ளது.அதற்கு வழி விடுவதற்காக, இடது பக்கமாக செல்ல முயன்றார். அப்போது, பின்னால் கோயம்பேடில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து வேகமாக பைக்கில் மோதியது.இதில், பெனாசிற்பி மற்றும் குழந்தை அசியான் அகமது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். முக்தாஸ் அகமது, மகள் அயதல் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினர். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுனர் புதுச்சேரியை சேர்ந்த குமார், 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை