உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

புதுச்சேரியில் மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தலைதுாக்கி வரும் பேனர் கலாசாரத்தை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி என்றால் வீதிகள் தோறும் மதுக்கடைகள், தெருவுக்கு தெரு, டிராபிக் சிக்னல்களில் பிறந்த நாள் வாழ்த்து பேனர்கள், கட்அவுட்கள் இருப்பது வழக்கம். இதனை கவனித்த புதுச்சேரி மாவட்ட நீதிமன்றம், பேனர்கள் உடனடியாக அகற்றவில்லை என்றால், பேனர் தடை உத்தரவை மீறும் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என கடந்த பிப்., மாதம் கலெக்டர், துறை செயலர்களுக்கு கடிதம் எழுதினார்.அதைத் தொடர்ந்து, புதுச்சேரி முழுதும் வைக்கப்பட்டு இருந்த பேனர், கட்அவுட், பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அப்போது, ஒன்றிரண்டு இருந்த பேனர்களையும் அதிகாரிகள் அகற்றி சுத்தம் செய்தனர். புதுச்சேரி சிக்னல்கள், பிரதான வீதிகள் பேனர் இன்றி பளிச்சென இருந்தது.தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் பேனர் வைக்கும் கலாசாரம் மீண்டும் தலைதுாக்க துவங்கி விட்டது. காமராஜர் சாலை, பாலாஜி தியேட்டர் அருகே வைக்கப்பட்டுள்ள பேனர், மழையில் சாய்ந்து வாகன ஓட்டிகள் மீது விழும் நிலையில் உள்ளது.இதுபோல், வில்லியனுார் பைபாஸ் முழுதும் வரிசையாக 20க்கும் மேற்பட்ட பேனர்கள், கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். தட்டாஞ்சாவடி ராஜிவ் சிக்னல், அண்ணா சாலை, ராஜா தியேட்டர் சிக்னல், சோனாம்பாளையம் சந்திப்புகளிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முழுதும் பேனர் கலாசாரம் மீண்டும் தலை துாக்குவதை துவக்கத்திலேயே தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிர்தப்பிய வாகன ஓட்டிகள்

புதுச்சேரியில் நேற்று மாலை சூறை காற்று வீசியது. அப்போது, காந்தி வீதி ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு அருகே உள்ள தனியார் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த விளம்பர பேனர் காற்றில் கிழிந்து பறந்தது. காந்தி வீதி வழியாக பைக்கில் சென்ற நபர் மீது விழுந்தது. இதில் அதிஷ்டவசமாக பைக்கில் வந்த நபர் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி