உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலையில் நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

புதுச்சேரி: கொக்கு பார்க்கில் இருந்து தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைக்கு செல்லும் சாலையில் குடிமைப் பொருள் வழங்கல், கலால், எடையளவு, எழுது பொருள் அச்சகம் போன்ற துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அரசு அச்சகமும் இங்கு செயல்படுகிறது.இங்கு நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த அலுவ லகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.போக்குவரத்து முக்கியத் துவம் வாய்ந்த இந்த 200 மீட்டர் சாலை கடைகளின் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி இப்போது குறுகிய சந்தாக மாறிவிட்டது. இச்சாலையில் தாறுமாறாக இருபுறமும் வாகனங்கள் நிறுத்தி விட்டு செல்லுவதால் போக்குவரத்து நெரிசல் தினமும் உச்சக்கட்டத்தில் உள்ளது.கலால் துறைக்கு தினமும் 20 லாரிகள் சரக்கு பெர்மிட்டிற்காக வருகின்றன. இந்த லாரிகள் அனைத்துமே இந்த சாலையில் தான் சகட்டுமேனிக்கு நிறுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி கார்களும் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன.இதுதவிர ஓட்டல், டீக்கடைகளுக்கு வருபவர்களும் தாறுமாறாக பைக்குகளை நிறுத்திவிட்டு, பல மணி நேரத்திற்கு பிறகு வந்து வாகனங்களை எடுக்கின்றனர். சாலையின் பாதி அளவிற்கு, தாறுமாறாக நிறுத்தப்படும் பைக்குகள் அடைத்து கொள்ளுவதால், போக்குவரத்து நெரிசல் எப்போதுமே அதிகமாக உள்ளது.சற்குரு கணபதி ஆசிரமம் துவங்கி, கொக்கு பார்க் வரையுள்ள இச்சாலை, விசாலமாக தான் இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு கடைகள் பிடியில் சிக்கியதால் தான் சுருங்கிபோய்விட்டது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளுக்கு கரண்ட், குடிநீர் என அனைத்தையும் அரசு துறைகளே செய்து கொடுத்துள்ளன.இந்த கடைகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுக்குபோதே போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளின் அளவை குறைத்து கட்ட சொல்லி நிபந்தனை விதித்து இருக்கலாம். அதையும் அரசு துறைகள் செய்யாததால் இப்போது போக்குவரத்து நெரிசலால் இச்சாலை விழிபிதுங்கி நிற்கின்றது.அடுத்து சில வாரங்களில் இச்சாலையில் கான்பெட் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்ட உள்ளது. ஏற்கனவே இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் உச்சக்கட்டத்தில் உள்ள சூழ்நிலையில், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரித்து, ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகஒன்று, ஆக்கிரமிப்பு கடைகளை குடிமை பொருள் வழங்கல் துறை எதிரே முற்றிலுமாக அகற்றி வேறுஇடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லை யெனில், ஆக்கிரமிப்பு கடை களின் நீளம் அகலத்தை குறைந்து சற்றே உள்ளே வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சாலை விசாலமாவதுடன், போக்குவரத்து நெரிசலும் முடிவுக்கு வரும்.சாலையும் கந்தல்சாலையும் கந்தல்

குடிமை பொருள் வழங்கல் துறைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக கந்தலாகி உள்ளது. பைக் ஓட்டிகள் தடுமாறி விழுந்து செல்லுகின்றனர். போர்க்கால அடிப்படையில் இச்சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை