மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த டைலர் பலி
23-Feb-2025
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு, சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மதுபாலா, 30; கூலி தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் முருகனை பிரிந்து, தனது 4 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த பிப். 20ம் தேதி வீட்டில் சமையல் செய்யும் போது, எதிர்பாராதவிதமாக, மதுபாலா புடவையில் தீ பற்றி, உடல் முழுதும் எரிந்தது. இதைகண்ட அருகிலிருந்தவர்கள் மதுபாலாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு, தீக்காயங்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மதுபாலா நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Feb-2025