உள்ளூர் செய்திகள்

தொழிலாளி சாவு

புதுச்சேரி: அதிகமாக குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.டி.என்.பாளையம் காலனியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன், 42; கூலித்தொழிலாளி. இவருக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள தெய்வேந்திரன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு திரிந்து வந்ததால், அவரது மனைவி கலைவாணி அவருடன் வாழாமல் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்.இதனால் மனவருத்தத்தில் இருந்த தெய்வேந்திரன் நேற்று காலை 6:00 மணியளவில் அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி விழுந்து இறந்தார். அவரது தந்தை ரங்கநாதன் புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ