உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

அரியாங்குப்பம் : விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 27; இவர் அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்யும் போது, மின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி துாக்கியெறியப்பட்டார்.அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அரியாங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !