உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

புதுச்சேரி: கோட்டக்குப்பம் சின்ன முதலியார்சாவடி பள்ளத்து வீதியைச் சேர்ந்தவர் மழலைமொழி 61, கூலித் தொழிலாளி. இவர் குயிலாப் பாளையத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரிடம் வேலை செய்தார். அண்ணா சாலையில் உள்ள ஐந்து அடுக்கு கட் டட வேலைக்கு மேஸ்திரி ராஜ் அழைத்ததின் பேரில், நேற்று முன்தினம் இரவு மழலைமொழி வேலைக்கு சென்றார். இரவு நேரத்தில் ஐந்தாவது மாடியில் வேலை நடந்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி மழலைமொழி துாக்கி வீசப்பட்டார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !