உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை 

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு டி.வி.மலை ரோட்டை சேர்ந்தவர் பழனி, 58; கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகன் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வரும் 15ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பழனி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டார்.அவரது மனைவி ஜெயலட்சுமி புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ