உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலகப் பெருங்கடல் தின விழா

உலகப் பெருங்கடல் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரிஅருங்காட்சியகத்தில் உலகப் பெருங்கடல் தின விழா கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு கடந்த 8ம் தேதி உலக பெருங்கடல் தின கண்காட்சி துவங்கியது. இக்கண்காட்சியில் பெருங்கடல் குறித்த விளக்கம், பெருங்கடல்களின் வகைகள், கடல்வாழ் உயிரினங்களின் ஒளிப்படங்கள், மீன் வகைகளின் கோட்டோவியப் படங்கள் இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசுபிக் பெருங்கடலின் பிெரஞ்சு மொழிப் படம் ஆகியவை இடம்பெற்றிருந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.மேலும், இணையவழிக் கருத்தரங்கம் நடந்தது. பெருங்கடல் பேணுவோம் என்றத் தலைப்பில் கடல்சார் ஆய்வாளர் அசோகா சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஆரோவில் இளைஞர்கள் கல்வி மையத்தின் இயக்குனர் மீனாட்சி துவான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெருங்கடல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். புதுச்சேரி அருங்காட்சியக மேலாளர் மனோரஞ்சினி திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை