உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி, காந்தி திடலில், பாலாஜி வித்தியாபீத் யோகா மகோற்சவத்தை முன்னிட்டு, 10வது அகில உலக யோகா தின விழா நடந்தது. நிகழ்ச்சியில் பாலாஜி வித்தியாபீத் நிகர்நிலைப் பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை வேந்தர் பிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார்.இதில், 500க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லுாரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, யோகா விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் நடந்தது. நிகழ்ச்சியினை பேராசிரியர் ஆனந்த பாலயோகி பவனானி தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் சுவாதி மற்றும் டாக்டர் பல்லவி ஆகியோர் பங்கேற்றனர். சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க செயலாளர் தயாநிதி, மூத்த தலைவர் கஜேந்திரன், சங்க பொருளாளர் சண்முகம், துணை செயலாளர் தேவசேனா பவனானி, டாக்டர் பாலாஜி, சங்க உறுப்பினர்கள் லலிதா சண்முகம் மற்றும் செந்தில் குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை