உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் யோகா தின விழா

வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில் யோகா தின விழா

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழு தலைமை நிர்வாக அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன் மற்றும் பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் ஆனந்த்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.'தன்னலம் மற்றும் சமூகநல யோகா' என்ற தலைப்பில், யோகா ஹீல்ஸ் நிறுவனர் வசந்த்ரா, யோகாவின் சிறப்பு குறித்து எடுத்துரைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பேராசிரியர் பால்ராஜ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூலிகை பானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ