மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
பரங்கிப்பேட்டை : கழிவுநீர் வெளியேற்றியதை கண்டித்த முதியவரை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த மேலக்குப்பத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 65; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் செல்வகணபதி. உறவினர்களான இவர்களுக்குள் இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், செல்வகணபதி மகன் ஆனந்தராஜ் நேற்று தனது வீட்டின் கழிவுநீரை மாரிமுத்து வீட்டின் எதிரில் உள்ள குளத்தில் பைப் வழியாக வெளியேற்றினார். இதனை மாரிமுத்து கண்டிக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், மண் வெட்டியால் மாரிமுத்து தலையில் தாக்கினார். அதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆயிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மாரிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை,25; கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago