உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பணிக்கு வயது தளர்வு அளிக்காதது இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இளைஞர் காங்., கண்டனம்

அரசு பணிக்கு வயது தளர்வு அளிக்காதது இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் இளைஞர் காங்., கண்டனம்

புதுச்சேரி, : அரசு பணியில் வயது தளர்வு அளிக்காமல்அரசு துரோகம் இழைப்பதாக இளைஞர் காங்., மாநில தலைவர் ஆனந்த்பாபு குற்றம்சாட்டி உள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு பணியில் குருப் பி நேரடி ஆட்சேர்ப்பில், 2 ஆண்டு வயது தளர்வு அளிக்கும்முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காதது வேதனை அளிக்கிறது. வயது வரம்பு தளர்வு பெற மத்திய அமைச்சகத்தை அணுகியது தவறு. மாநில அமைச்சரவை பரிந்துரையின் பேரில் கவர்னர் அனுமதி வழங்க முடியும்.வயது வரம்பு தளர்வுக்கு மத்திய அமைச்சகத்திடம் அணுகிய என்.ஆர்.காங்., பா.ஜ., அரசு மாநில இளைஞர்களுக்கு துரோகம் இழைத்து எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உள்ளது.கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 2010ம் ஆண்டு பி.எட்., முடித்தவருக்கு தற்போது 36 வயது ஆகிறது.13 ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தேர்வு மற்றும் பிற அரசு வேலை தேர்வு நடக்கிறது.அதனால் 2 ஆண்டு வயது தளர்வு குறைவானது. அனைத்து தேர்விலும் வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும்.மத்தியில், மாநிலத்தில் ஒரே ஆட்சி இருந்தும் இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவு கானல் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முடியவில்லை என்றால் முதல்வர் ரங்கசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ