உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டு எண்ணும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் மாகி மண்டல நிர்வாகி மோகன்குமார் தகவல்

ஓட்டு எண்ணும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் மாகி மண்டல நிர்வாகி மோகன்குமார் தகவல்

புதுச்சேரி: மாகியில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மண்டல நிர்வாகி மோகன்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது;லோக்சபா தேர்தலில் மாகி தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, நாளை மறுநாள் 4ம் தேதி ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை சுமூகமாக நடக்க அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணப்படும். இ.வி.எம்மில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, காலை 8:30 மணிக்கு துவங்கும். 8 டேபிள்களில் 4 சுற்றுகள் நடக்கும். அதில் தேர்வு செய்யப்பட்ட 5 வி.வி.பாட் சீட்டுகள் எண்ணப்படும். இதற்காக 35 ஓட்டு எண்ணும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார், ஆயுதப்படை, சி.ஏ.பி.எப்., வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுகின்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் நுழைய அதிகாரிகள், முகவர்களுக்கு தனித்தனி நுழைவு வழி இருக்கும்.ஒவ்வொரு மேசையிலும் ஒரு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் மைக்ரோ அப்சர்வர் இருப்பர். ஓட்டு எண்ணும் மையத்தில் மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ளே மற்றும் வெளியே சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு சுற்றுவாரியான முடிவுகள் டிஸ்பிளே மூலம் அறிவிக்கப்படும் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை