உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 101 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகபட்சமாக நேற்று 101 டிகிரி வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கத்திரி வெயில் முடிந்த நிலையில், புதுச்சேரியில் வெயில் தாக்கம் குறையாமல் இருந்து வருவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவானது. இதனால் சாலையில் மாலை வரை அனல்காற்று வீசியது. இந்தாண்டில் இதுவரை 31 முறை வெயில் சதம் அடித்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !