| ADDED : ஜன 29, 2024 04:39 AM
புதுச்சேரி : துணை ஜனாதிபதி வருகையையொட்டி, கடற்கரை சாலையில் பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். போராட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அரசு முறை பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் நேற்று புதுச்சேரி வந்தார். கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கினார். துணை ஜனாதிபதி வருகையொட்டி கடற்கரை சாலையில் பொதுமக்கள் செல்ல நேற்று மதியம் 3:00 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.வழக்கமாக வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வர். பாதுகாப்பு கருதி போலீசார் தடை விதித்ததால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வெறிச்சோடி கிடந்த கடற்கரை சாலையில் அமைதியான சூழல் நிலவியதால், காந்தி சிலை அருகே நேற்று மயில் ஒன்று வந்தது. காந்தி சிலை துாணில் நின்றிருந்த மயிலை காகங்கள் கொத்தி விரட்டின. போராட்டம் நடத்த தடை
துணை ஜனாதிபதி வருகையின்போது சில கட்சி பிரமுகர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக போலீசார் அளித்த தகவலின்பேரில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போராட்டங்கள், பேரணி, ஊர்வலம் நடத்தவும், 5க்கும் மேற்பட்டோர் கும்பலாக கூடமாவட்ட கலெக்டர் வல்லவன் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு இன்று 29ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், சமய நிகழ்ச்சிகள், திருமணம், இறுதி ஊர்வலம் உள்ளிட்டவைக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.