மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
2 hour(s) ago
புதுச்சேரி : ஊர்காவல்படை வீரர் பணிக்கு 4 நாட்கள் நடத்தப்பட்ட தேர்வில், 1616 பேர் பங்கேற்றதில், 524 பேர் தகுதி பெற்றுள்ளனர்.புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய கடந்த அக்., மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4492 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 1ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்கியது. முதல் இரு நாட்கள் தினசரி 500 பேர் அழைக்கப்பட்டனர்.இதில், 575 பேர் பங்கேற்றத்தில், 140 பேர் உடற்தகுதி தேர்வில் தகுதி பெற்றனர். மூன்றாம் நாள் 750 பேர் அழைக்கப்பட்டதில், 406 பேர் பங்கேற்று, 143 பேர் தகுதி பெற்றனர்.நான்காம் நாளான நேற்று 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில், 635 பேர் நேற்றைய உடற்தகுதி தேர்வில் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதலில் 241 பேர் தகுதி பெற்றனர்.கடந்த 4 நாட்களாக நடந்த உடற்தகுதி தேர்வில் மொத்தம் 2750 பேர் அழைக்கப்பட்டதில், 1616 பேர் பங்கேற்றதில், 524 பேர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு 20ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago