மேலும் செய்திகள்
கஞ்சா - குட்கா கடத்திய 2 வாலிபர்கள் கைது
20-Jul-2025
அரியாங்குப்பம்: கடலுார் சாலை நோணாங்குப்பம் அருகே கஞ்சா விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சந்தேகமான முறையில் நின்ற இரு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அரியாங்குப்பம் பாரதியார் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (எ) வெங்கி, 19; ஓடவெளியை சேர்ந்த பாலா, 20, என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர்.
20-Jul-2025