2 நாள் உளவியல் மாநாடு பல்கலையில் நாளை துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இந்தியப் பள்ளி உளவியல் சங்கம், வடோதரா, ஹிப்னாஸிஸ் (Hypnosis) அகாடமி சார்பில் பன்னாட்டு பள்ளி உளவியல் மாநாடு நாளை (24ம் தேதி) துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. மாநாட்டை மத்திய இணையமைச்சர் முருகன் துவக்கி வைத்து, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், தலைமைத்துவ விருதுகள் வழங்கி, பேராசிரியர் பாஞ் ராமலிங்கம் எழுதிய உளவியல் சொற்களஞ்சியம் நுாலினை வெளியிடுகிறார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசுகின்றனர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத் துணை வேந்தர் மோகன் சிறப்புரை வழங்குகிறார்.புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்குகிறார். பேராசிரியர் பாஞ் ராமலிங்கம் நோக்கவுரை வழங்குகிறார். மாநாட்டில், 32 ஆய்வு கட்டுரைகளும், இரண்டு சிறப்பு அமர்வுகளும் நடக்கிறது.