மேலும் செய்திகள்
50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோவையில் தாசில்தார் கைது
26-Jul-2025
லஞ்ச ஒழிப்பு துறையின் அலட்சியம்!
12-Jul-2025 | 1
புதுச்சேரி:புதுச்சேரியில் ரேஷன் கார்டை பிரித்து வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிமைப்பொருள் வழங்கல் துறை ஆய்வாளர் மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் அய்யனார். இவர், கூட்டு குடும்ப ரேஷன் கார்டை பிரித்து தனக்கு தனியாக வழங்க வேண்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதன்பேரில் கள ஆய்வு செய்த வட்டார ஆய்வாளர் சற்குணம், தனது புரோக்கர் பாலகுமாரன் மூலம், ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதில் விருப்பம் இல்லாத அய்யனார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, பாலகுமரனை அய்யனார் தொடர்பு கொண்டபோது, ரூ.10 ஆயிரம் கொடுத்தால், ரேஷன் கார்டு வழங்குவதாகவும், முன்பணமாக ரூ.5 ஆயிரம் கேட்டார். அந்த பணத்தை அய்யனார், ஜி.பேவில் அனுப்பி வைத்தார். நேற்று மதியம், சற்குணத்தை தொடர்பு கொண்ட அய்யனார், மீதி பணம் ரூ.5 ஆயிரத்தை எங்கு வந்து கொடுப்பது எனக் கேட்டார். அதற்கு சற்குணன், பாலகுமாரனை பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைப்பதாகவும், அங்கு அவரிடம் பணம் கொடுக்குமாறு கூறினார். அதன்படி நேற்று மாலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த அய்யனாரிடம், பணத்தை வாங்கிய பாலகுமாரனை, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அப்போது பாலகுமாரனை தொடர்பு கொண்ட, ஆய்வாளர் சற்குணன், தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நிற்பதாகவும், பணத்தை அங்கு வந்து கொடுக்குமாறு கூறினார். அதன்படி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள மெடிக்கலில் வைத்து, பாலகுமாரனிடம் இருந்து பணத்தை வாங்கிய ஆய்வாளர் சற்குணத்தை, போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் லஞ்சம் வாங்கிய இருவரை போலீசார் கையும் களவுமாக கைது செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26-Jul-2025
12-Jul-2025 | 1