மேலும் செய்திகள்
101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி
02-Jun-2025
புதுச்சேரி; மூன்று நாட்கள் சதம் அடித்த வெயிலை தொடர்ந்து நேற்று மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால், மக்கள் அவதி யடைந்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி 100.8 டிகிரி, மறுநாள் 8ம் தேதி 104 டிகிரி வெயில் பதிவானது. தொடர்ந்து நேற்று முன்தினம் 9ம் தேதி 100.3 டிகிரி என, தொடர்ந்து மூன்று நாட்கள் வெயில் சதம் அடித்தது. சாலையில் அனல் காற்று வீசியதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதியடைந்தனர்.இந்நிலையில், நேற்று 99 டிகிரி வெப்பம் பதிவானது. அதையடுத்து, மாலை 6:00 மணியளவில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்த்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
02-Jun-2025