உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திடீர் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதம்

திடீர் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சேதம்

காரைக்கால் : காரைக்காலில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வீடுகள் மற்றும் மூன்று கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. காரைக்கால் திருநள்ளார் பிடாரிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த கதிரவன் என்பவரின் வீடு நேற்று திடீரென தீபிடித்து எரிந்தது. உடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயன்றனர். காற்றின் வேகத்தில் அருகில் உள்ள ராஜலட்சுமி மற்றும் ராதை ஆகியோரின் வீடுகளுக்கும், அருகில் இருந்து ஓட்டல், கோழிக்கறி கடை மற்றும் பைக் பழுது நீக்கும் கடைகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்த சுரக்குடி மற்றும் காரைக்கால் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைந்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்து பீரோ, கட்டில், மின்விசிறி, பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து கறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி