உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

காரைக்கால்: காரைக்கால், கோட்டுச்சேரி சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். தனியார் மருந்துவக்கல்லுாரி அருகில் நின்றிருந்த மூவரை பிடித்து சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர்.நாகப்பட்டினம், அக்கரப்பேட்டை பகுதியை சேர்ந்த வாசு, 22; மாதவன், 23; ஆகாஷ், 22, ஆகியோர் என்பதும், இவர்கள் இளைஞர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ