கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை போலீசார் நேற்று (நவ.,19) மாலை சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லெனின் நகர் பகுதியில் உள்ள தனியார் பார் அருகே இரண்டு வாலிபர்கள் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் தப்பியோட முயன்ற இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் லாஸ்பேட்டை சரவணன் மகன் ராகேஷ்,20; ரவிச்சந்திரன் மகன் நிர்மல்,19 எனவும், அவர்கள் அந்த வழியாக வந்த பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கத்தியை பறிமுதல் செய்தனர். மற்றொரு சம்பவம்:: டி நகர் போலீசார் நேற்று கொட்டுப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். சாலை முத்துமாரியம்மன் கோவில் அருகில் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்,35; என்பவரை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.