உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் மது தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில், சிலர் பொது இடத்தில் நின்று கொண்டு போதையில் அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்வதாக, கோரிமேடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், அங்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த ரகு, 32; என்பவரை கைது செய்தனர்.அதே போல, கோரிமேடு, கனரக வாகனங்கள் நிறுத்துமிடத்தில், போதையில், பொது மக்களிடம் தகராறு செய்த, கேரளாவை சேர்ந்த நிஷாந்த், 30; மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல், 48; ஆகியோரையும் கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ