மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
04-Nov-2025
புதுச்சேரி: டி.நகர் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சாரம் தென்றல் நகரில், 3 வாலிபர்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு கத்தியுடன் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். சாரம் வேலன் நகரை சேர்ந்த சக்தி (எ) சத்தியமூர்த்தி, 21; நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்த மாதேஷ், 21; உருளையன்பேட்டை, சேர்ந்த குட்டி ராகுல் (எ) வேல்முருகன், 22; என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
04-Nov-2025