உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவிற்கு 4000 பேர் வருகை

விடுமுறை நாட்களில் தாவரவியல் பூங்காவிற்கு 4000 பேர் வருகை

புதுச்சேரி, புதுச்சேரியில் விடுமுறை காரணமாக மூன்று நாட்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் தாவரவியல் பூங்காவிற்கு வந்துள்ளனர்.புதுச்சேரியில் பிரதான பொழுதுபோக்கு இடமாக விளங்கும் தாவரவியல் பூங்காவிற்கு கடந்த சனி, ஞாயிறு மற்றும் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்றைய தினமான திங்கள்கிழமை வரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கடந்த மூன்று நாட்களில் வந்துள்ளனர். பூங்காவில் பெரியவர்களுக்கு 20 ரூபாய், சிறியவர்களுக்கு 10 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பூங்காவில் இயங்கும் சிறுவர் உல்லாச ரயிலில் பயணிக்க பெரியவர்களுக்கு பத்து ரூபாய் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்காவிற்கு வந்துள்ள நிலையில், ரயில் வண்டியிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் நுழைவு கட்டணம் மற்றும் ரயில் கட்டணம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்திருக்கும் என ஊழியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ