உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 16.06 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 16.06 லட்சம் மோசடி

புதுச்சேரி :: புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 16.06 லட்சம் பணத்தை மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் சையத் இப்ராஹிம் இவர் வங்கி கணக்கில் இருந்து இவருக்கு தெரியாமல் , ஏ.இ.பி.எஸ் மூலம் ரூ. 20 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். சுப்புலட்சுமி என்பவர் வங்கி கணக்கில் இருந்து, ரூ. 54 ஆயிரம். அதே போல, மணிகண்டன் என்பவரிடம் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிக சம்பாதிக்கலாம் என கூறினார் அவரிடம் ரூ. 12.50 லட்சம் மோசடி செய்துள்ளனர்.இவரை, அடுத்து, புவனேஸ்வரி என்பவரிடம் ரூ. 1.96 லட்சம் பெற்று மொசடி செய்தனர்.மேலும் புதுச்சேரியை சேர்ந்த காந்தராஜ் என்பவரிடம் கிரிடிட் கார்டு புதுப்பிக்க வேண்டும் என வங்கி அதிகாரி பேசுவது போல, கிரிடிட் கார்டு விபரங்களை மர்ம நபர் வாங்கி, அதன் மூலம் ரூ. 86 ஆயிரம் பணத்தை அவரது வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளனர்.புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை