உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்

வில்லியனுாரில் 508 பால்குட ஊர்வலம்

வில்லியனுார்: வில்லியனுார் சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 26ம் ஆண்டு பால்குட அபிேஷகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணியளவில் கணபதி ேஹாமம், 8:40 மணியளவில்508 பால்குடங்களை சுமந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள குளத்தில் சிவசுப்ரமணியனுக்கு அபிேஷகம் செய்து, புனித நீராடப்பட்டது. தொடர்ந்து வில்லியனுார் மாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பகல் 11:30 மணியளவில் சுவாமிக்கு 508 குடம் பால்அபிேஷகம், 12:00 மணியளவில் அன்னதானம், இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் உற்சவதார்கள் செந்தாமரைக்கண்ணன் மற்றும் சீர்காழி ராஜேஷ் குடும்பத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை