உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை

79 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரமா? ஒதியஞ்சாலை போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 79 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகார் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த 79 வயது பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி நேற்று காலை 4:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தார். முகத்தில் கீறல் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, தன்னை ஒரு கும்பல் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அனுப்பட்டது. கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் துய்மா வீதி ஓட்டலில் விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டியிடம், ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.ஓட்டலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், அங்கு வேலை செய்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். துய்மா வீதியில் மூதாட்டிக்கு சொந்தமான ஓட்டலை, வாணரப்பேட்டையைச் சேர்ந்த நபர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். குத்தகை தொடர்பாக 2017ம் ஆண்டு இரு தரப்பிற்கும் இடையே பிரச்னை எழுந்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்துள்ள புகாரின் உண்மை தன்மை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை