உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் குறைதீர்வு முகாமில் 85 புகார்களுக்கு உடனே தீர்வு

மக்கள் குறைதீர்வு முகாமில் 85 புகார்களுக்கு உடனே தீர்வு

புதுச்சேரி : உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு, சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., ரகுநாயகம், கிழக்கு பகுதி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பொது மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதே போல், காரைக்கால் டவுன் காவல் நிலையத்தில் எஸ்.பி., சுப்ரமணியன், திருநள்ளார் காவல் நிலையத்தில் எஸ்.பி., பாலச்சந்திரன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.மங்கலம் காவல் நிலையத்தில் எஸ்.பி., வம்சிதர ரெட்டி, பாகூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., பக்தவாசலம், மேட்டுப்பாளையத்தில் எஸ்.பி., வீரவல்லபன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்தில் போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன், போக்குவரத்து எஸ்.பி.,க்கள் திரிபாதி, செல்வம், மோகன்குமார், கலந்து கொண்டு போக்குவரத்து சம்பந்தமான குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் மாகே, ஏனம் பகுதியில் குறை தீர்வு கூட்டம் நடந்தது. இதுகுறித்து சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில், 'கூட்டத்தில், 111 புகார்கள் பெறப்பட்டு, 85 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை