மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
21 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
21 hour(s) ago
புதுச்சேரி: சுகாதாரத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட செவிலியர் அதிகாரிகளில் முதற்கட்டமாக 92 நபர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்.புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 155 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதிற்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. அதன்படி, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 144 நபர்களில், முழுமையாக சான்றிதழ்கள் சமர்ப்பித்த 92 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி செவிலியர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டிய 52 நபர்கள், மார்ச் 8ம் தேதிக்குள் சான்றிதழ் வழங்க கால அவகாசம் வழங்க முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், செவிலியர் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு பங்கேற்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago