உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொறியாளர் பணிக்கான தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு

பொறியாளர் பணிக்கான தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு

புதுச்சேரி: இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணிக்கான தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அரசு செயலர் பங்கஜ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பொதுப் பணி துறையில், இளநிலை பொறியாளர் மற்றும் ஓவர்சீர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும், 27ம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடக்கிறது. முதல் தாள் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், இரண்டாம் தாள் மதியம் 2:30 முதல் 4:30 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை, 1,435 ஆண்கள், 416 பெண்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் கருப்பு நிற பால் பாய்ண்ட் பேனா, நுழைவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வர வேண்டும். மொபைல் போன் உள்ளிட்ட பிற பொருட்கள் அனுமதிக்கப்படமாட்டாது.தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து செய்வதோடு, பிற தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் விவரம் வேண்டுவோர், அலுவலக நேரத்தில், 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் நாளை 26ம் தேதிவரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை