உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்

புதுச்சேரி கடற்கரையில் விளையாடிய குழந்தை மாயம்

புதுச்சேரி : கடற்கரையில் பொம்மை விற்கும் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் குழந்தை திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் கடற்கரை சாலையில் பொம்மை விற்று கொண்டிருந்தனர். இவர்களுடன் இருந்த மூன்றரை வயதுடைய சனல்யா என்ற பெண் குழந்தை, பொம்மை விற்றுக் கொண்டிருந்த பெற்றோரின் அருகில் விளையாடி கொண்டிருந்தது. நேற்று இரவு 8:00 மணியளவில் திடீரென அந்த குழந்தை மாயமானது. குழந்தையின் பெற்றோர் கடற்கரையில் பல இடங்களில் அலைந்து தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்க வில்லை. பதற்றத்துடன் குழந்தையின் பெற்றோர் பெரியக்கடை போலீசில், குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாக புகார் அளித்தனர்.போலீசார் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழந்தை தேடிசென்று விசாரணை செய்தனர். குழந்தை மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி