|  ADDED : ஜன 24, 2024 04:35 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
புதுச்சேரி : புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலை சீரமைக்க பள்ளம் தோண்டியபோது சரிந்து விழுந்த புத்தம் புதிய இரண்டுக்கு மாடி வீட்டை கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.புதுச்சேரி, ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சாவித்ரி. இவர், உப்பனாறு வாய்க்கால் கரையோரத்தில் 300 சதுரடி இடத்தில் 2 அடுக்கு மாடி வீடு கட்டினார். இதன் கிரகப்பிரவேசம் வரும் 11ம் தேதி நடைபெற இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வாய்க்கால் கரையை பலப்படுத்த ஹிட்டாச் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது சாவித்ரியின் வீடு பின் பக்கமாக, வாய்க்காலில் சரிந்து விழுந்து நொறுங்கியது.இந்த வீட்டை அமைச்சரின் உத்தரவின்பேரில் நகரமைப்பு குழுமம் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.அதில், வீடு 3 அடி ஆழ கடைக்காலில்  250 சதுரடி பரப்பளவில் தரைத்தளம் அமைத்து கட்டியுள்ளனர். அதன்மீது முதல் மற்றும் 2ம் தளத்தின் வீட்டின் பரப்பளவை சற்று அதிகரித்துள்ளனர். இதனால் வீட்டின் மொத்த எடை ஒரு பக்கமாக இருந்தது. இந்நிலையில், வாய்க்கால் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, அதிர்வு ஏற்பட்டு வீடு பின்பக்கமாக சரிந்து விழுந்தது தெரிய வந்தது.வாய்க்காலில் இடிந்து விழுந்த வீட்டை ஏராளமான மக்கள்  புகைப்படம் எடுத்து வருகின்றனர்.