உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரில் தகராறு; வாலிபர் அடித்து கொலை

பாரில் தகராறு; வாலிபர் அடித்து கொலை

அரியாங்குப்பம் : புதுச்சேரி, தவளக்குப்பம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் முருகையன் மகன் ஜெகதீஸ்வரன், 20; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, இவரும், அதே பகுதியை சேர்ந்த அருமைசெல்வம் மகன் ரிஷி,28; உட்பட 4 பேர் அப்பகுதியில் உள்ள பாரில் மது குடித்தனர். அப்போது, ஜெகதீஸ்வரனுக்கும், ரிஷிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை சக நண்பர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.பின்னர் ஜெகதீஸ்வரன் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவு 12:00 மணிக்கு வீட்டு வாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ரிஷி அருகில் கிடந்த கட்டையை எடுத்து ஜெகதீஸ்வரனை தாக்கினார். அதில் தலையில் படுகாயமடைந்து, மயங்கி விழுந்த ஜெகதீஸ்வரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.தகவலறிந்த தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து, ரிஷியை றேந்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மது குடிப்பதால் பிரச்னை

தவளக்குப்பம் பகுதியில் காலி மனை உள்ளிட்ட திறந்த வெளிகளில் பகல் நேரங்களிலேயே கும்பல் கும்பலாக அமர்ந்து மது குடித்து வருகின்றனர். இதனால், மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். திறந்த வெளிகளில் மது குடிப்பவர்களால் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பொது இடத்தில் மது குடிப்போர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்