பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் ஆடிப்பெருக்கு
புதுச்சேரி: இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஆடிப்பெருக்கு உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ், இரும்பை, டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பெருக்கு உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 மஞ்சள் குடம் அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.