மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
20-Dec-2024
நகை திருடிய வாலிபர் கைது
27-Dec-2024
அரியாங்குப்பம்: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் போலீசார் கடந்த 2023ம் ஆண்டு, கஞ்சா வழக்கு தொடர்பாக, இரண்டு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில், தப்பியோடி அரியாங்குப்பம் அடுத்த ஓடவெளியை சேர்ந்த பாலா, 19, மீது போலீசார் வழக்கு பதிந்து, தப்பி சென்றவரை தேடிவந்தனர். இந்நிலையில், அரியாங்குப்பம் ஆர்.கே., நகர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அவ்வழியாக, பைக்கில் வந்த தலைமறைவாக இருந்த பாலாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
20-Dec-2024
27-Dec-2024