உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / °பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை

°பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் பன்றிகளை வளர்க்கவில்லை எனில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;உழவர்கரை நகராட்சிக்குட்பட்டகுடியிருப்பு பகுதிகளில் உள்ள காலியிடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் அபாயம் உள்ளதாக பொது மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.நகராட்சி சுகாதாரஊழியர்கள் ஆய்வு செய்ததில் உழவர்கரை, காமராஜ் நகர், லாஸ்பேட்டை தொகுதிகளுக்குட்பட்ட பிச்சைவீரன் பேட், பாரிஸ் நகர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், ஞானபிரகாசம் நகர், மடுவுபேட் பகுதிகளில் அதிக பன்றிகள் சுற்றி திரிவது கண்டறியப்பட்டுள்ளது.பன்றிகளை வளர்ப்போர் சொந்தமான இடத்தில் வைத்து பராமரிக்காமல் வெளியிடத்தில் திரிய விடுவதாக தெரிகிறது. எனவே பன்றிகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சுகாதாரமாக பன்றிகளை வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் உழவர்கரை நகராட்சி பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, பன்றிகள் வளர்ப்போர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ