உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்

வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்

புதுச்சேரி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது, சிறப்பு வசூல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆன்ட்ரூவ் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொழிலாளர் வருங்கால நிதி நிறுவனம் வருங்கால வைப்பு நிதி செலுத்த தவறிய நிறுவனங்களிடமிருந்து, நிலுவை தொகையை வசூலிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் முதல் அடுத்த மாதம் பிப்ரவரி வரை மூன்று மாதங்கள் செயல்படுத்த இருக்கிறது.எனவே, நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளையும் உடனடியாக செலுத்தி மேல் நடவடிக்கைகளான, நிறுவனங்களின் வங்கி கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளலாம். மேலும், சிறப்பு வசூல் அதிகாரி நியமனம், மற்றும் கைது சிறை அடைப்பு போன்ற மீட்பு நடவடிக்கைகளின் மூலம் எழும் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை