உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ராஜராமன், துணை செயலாளர் கணேசன் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக அனைத்து பாட பிரிவிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.ஜிப்மர் வேலை வாய்ப்பில் புதுச்சேரிக்கு தனி ஒதுக்கீடு, புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் 10ம் தேதி அ.தி.மு.க., சார்பில் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், தமிழக எம்.பி., சண்முகம் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !