உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க., ஊர்வலம், ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க., ஊர்வலம், ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் இணைக்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுார் சாலை ரோடியர் மில் திடலில் நேற்று காலை 11:15 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.அ.தி.மு.க., அமைப்பு செயலாளர், சண்முகம் எம்.பி., தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை, அண்ணா சாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை பின்புறத்தை அடைந்தது.அங்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், அவைத் தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், இளைஞரணி செயலாளர் மருது, புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன், சிவாலயா இளங்கோ, ஜெ.,பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், மாணவரணி முன்னாள் பொருளாளர் பார்த்தசாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி