உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடு இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.75,000 நிதி வழங்கல்

வீடு இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.75,000 நிதி வழங்கல்

புதுச்சேரி : வாய்க்காலில் வீடு இடிந்து விழுந்த குடும்பத்திற்கு அ.தி.மு.க., சார்பில் ரூ. 75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.உப்பனாறு வாய்க்கால் கரையோரம், ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சாவித்திரி என்பவர் புதிதாக கட்டிய இரண்டு மாடி வீடு நேற்று வாய்க்காலில் சரிந்து விழுந்தது.இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் முதல்வர் ரங்கசாமியைசந்தித்து அளித்த மனு;உப்பளம் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சாவித்திரி, தாழ்த்தப்பட்ட மகளிருக்கான இலவச மனை பட்டா பெற்று, காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தில் மானிய உதவி மற்றும் கடன் வாங்கி கல்வீடு கட்டினார்.வரும் 11ம் தேதி கிரகபிரவேசம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.வாய்க்காலை சீர்செய்ய ஆழமாக மண் எடுத்ததால், வீடு வாய்க்காலில் சரிந்து விழுந்தது.அவரது ஏழ்மை நிலையை கருதி ரூ. 20 லட்சம் நிதி உதவியும்,அதே பகுதியில் காலியாக உள்ள அரசு இடத்தில் வீடு கட்டி கொள்ள மாற்று இடம் தர வேண்டும் என, கூறியிருந்தார்.முதல்வர் ரங்கசாமி,உரிய நிவாரண வழங்கவும், ரெட்டியார்பாளையம் லார்பார்ட் சரவணன் நகரில் அரசுஅடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வழங்குவதாகஉறுதி அளித்தார்.இந்நிலையில் உப்பளம் அ.தி.மு.க., அலுவலகத்தில் அக்கட்சி சார்பில் வீடு இழந்த குடும்பத்திற்கு அன்பழகன் தலைமையில்ரூ. 75 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. பொருளாளர் ரவி பாண்டுரங்கன்,நகர செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் கருணாநிதி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ